மாணவர் YRDSB Google Gmail கணக்கினூடாக YRDSB இலத்திரனியல் அறிக்கைக் கோப்பை அணுகும் முறை



1.      நீங்கள் உங்கள் பிள்ளையின் YRDSB Google Gmail கணக்குக்குச் சென்றதும், நீங்கள் YRDSB Electronic Student Report என்ற விடயத் தலைப்பைக் கொண்ட ஒரு மின்னஞ்சலைக் காண வேண்டும்.

2.      மின்னஞ்சலைத் திறவுங்கள், நீங்கள் அதன் உள்ளடக்கத்தில் ஒரு தொடுப்பைக் கண்டு கொள்வீர்கள். அத்தொடுப்பைச் சொடுக்குங்கள் (திரையுருவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது, வலது).

3.      நீங்கள் ஒரு நுழைவுப் பதிவுத் திரையைக் கொண்ட ஒரு பாதுகாப்பான வலைத் தளத்துக்கு இட்டுச் செல்லப்படுவீர்கள், அங்கே நீங்கள் ஒரு கடவுச்சொல்லை இட வேண்டும் (பின்னர் சாம்பல் நிற அம்புக்குறியைச் சொடுக்குங்கள் அல்லது Enter ஐ அழுத்துங்கள்).

·       கடவுச்சொல் பின்வரும் வடிவில் உங்கள் பிள்ளயின் பிறந்த திகதியாகும்:

·       வவவவமாமாதிதி என்பதில் வவவவ என்பது பிறந்த வருடம், மாமா என்பது பிறந்த மாதம், திதி என்பது பிறந்த திகதி ஆகும்.

·       பிறந்த மாதம் அல்லது திகதி தனி இலக்கமாக இருந்தால், ஒரு 0 ஐச் சேர்க்க வேண்டும் என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

·       உதாரணமாக, ஒரு மாணவரின் பிறந்த திகதி 2010 மார்ச்சு 1 என்றால், நீங்கள் இட வேண்டியது 20100301 ஆகும்.

Title: screenshot of secure file sign in - Description: screenshot of secure file sign in

4.      நுழைவு பதிந்ததும், YRDSB Electronic Student Report ஐச் சொடுக்குங்கள்.

5.      உங்கள் பிள்ளையின் YRDSB அறிக்கைக் கோப்பு தோன்ற வேண்டும்.

6.      நீங்கள் மேலே வலப்புறப் பதாகையில் தரவிறக்கு பொத்தானைச் சொடுக்கி அறிக்கைக் கோப்பைத் தரவிறக்கிச் சேமிக்கலாம்.

Title: screenshot of secure file download button - Description: screenshot of secure file download button

7.      நீங்கள் அறிக்கைக் கோப்பை அச்சிட விரும்பி, உங்கள் கணனியிலிருந்து ஓர் அச்சுப்பொறிக்கு அணுகல் இருந்தால், மேலே வலப்புப் பதாகையிலுள்ள அச்சுப்பொறி உருவைச் சொடுக்குங்கள்.

Title: screenshot of secure file print button - Description: screenshot of secure file print button

குறிப்பு: நாம் மாணாக்கருக்கு / பெற்றோருக்கு அவர்களின் தனிப்பட்ட கணனியில் / அச்சுப்பொறியில் அறிக்கைக் கோப்புக்களை அச்சிட உதவ முடியாதுள்ளோம்.

8.      மேலுள்ளவற்றில் உங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தால், உதவிக்காக உங்கள் மாணவரின் ஆசிரியரை அல்லது பாடசாலை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.